sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'டிவி' வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது

/

'டிவி' வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது

'டிவி' வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது

'டிவி' வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது


ADDED : ஜூன் 26, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தி.நகர் கிருஷ்ண கான சபா சார்பில், நாடக கலைஞர் 'டிவி' வரதராஜனுக்கு, வரும் 5ம் தேதி 'நாடக சூடாமணி' விருது வழங்கப்படுகிறது.

நாடக கலையில் சாதித்து வரும் கலைஞர்களுக்கு, தி.நகர் கிருஷ்ண கான சபாவில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று துவங்கி, ஒன்பது நாட்களுக்கு நடக்கிறது.

நாடக கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனரான, 'டிவி' வரதராஜனுக்கு, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெயரில், 'நாடக சூடாமணி' விருது வழங்கப்படுகிறது.

செல்வி லாவண்யா வேணுகோபாலுக்கு, இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பெயரில், நாடகத் துறை சிறப்பு விருதும் வழங்கப்பட உள்ளது. இறுதி நாளான ஜூலை 5ம் தேதி, விருது வழங்கும் விழா நடப்பதாகவும், அதற்கு ஜவுளி வர்த்தகர் டாக்டர் நல்லி குப்புசாமி தலைமை தாங்குவதாகவும், சபா சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சபாவில் இன்று, மாப்பிள்ளை கணேஷ் வழங்கும் 'கில்லாடி மாப்ளே' நாடகம் இயற்றப்படுகிறது. நாளை, ஒய்.ஜி., மதுவந்தியின் 'லக்ஷ்மி கல்யாண வைபோகமே' நாடகம்; 28ல் ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீவத்சன் எழுதிய 'கபித்வாஜா' மற்றும் 'கானல் நீரோ' நாடகம்; 30ல் பி.எம்.ஜி., மயூரப்ரியா பி.முத்துக்குமரனின் 'என்னடி பெண்ணே' நாடகம் இயற்றப்படுகிறது.

அதேபோல், ஜூலை 1 முதல் 5ம் தேதி வரை, பல்வேறு பிரபல கலைஞர்களின் நாடகங்கள் இயற்றப்படுகின்றன. இவற்றிற்கான, டிக்கெட் குறித்த விபரங்களுக்கு, நாரத கான சபா அலுவலகத்தை அணுகவும். தொடர்புக்கு, 044 - 2814 0806 எண்ணை அழைக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us