தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா வெற்றி

டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா வெற்றி

டி.வி.எஸ்., கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா வெற்றி


ADDED : மார் 29, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருவள்ளூர் டி.வி.எஸ்., கோப்பை கிரிக்கெட் போட்டியில், வீல்ஸ் இந்தியா அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில், அசோக் லேலண்ட் அணியை தோற்கடித்து.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டி.வி.எஸ்., கோப்பைக்கான டிவிஷன் கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

நேற்று முன்தினம் பட்டாபிராமில் நடந்த ஆட்டத்தில், வீல்ஸ் இந்தியா அணி, 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 151 ரன்கள் அடித்தது. பின் விளையாடிய எண்ணுார் அசோக் லேலண்ட் அணி, 27.1 ஓவர்களில், 133 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதனால், 18 ரன்கள் வித்தியாசத்தில், வீல்ஸ் இந்தியா வெற்றி பெற்றது.

ஆவடியில் நடந்த ஆட்டத்தில், ஓ.சி.எப்., அணி 21.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 105 ரன்களில் சுருண்டது. வி.வி.சி., அசோக் லேலண்ட் அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 106 ரன்கள் அடித்து எளிதில் வென்றது.

மற்றொரு ஆட்டத்தில், சி.பி.சி.எல்., அணி, 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 184 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.

அடுத்து ஆடிய லுாகாஸ் டி.வி.எஸ்., அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 99 ரன்களுக்கு மட்டுமே சுருண்டது. இதனால், சி.பி.சி.எல்., அணி, 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us