/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.வி.எஸ்., கோப்பை கிரிக்கெட் வைப்பு நிதி அணி அதிர்ச்சி தோல்வி
/
டி.வி.எஸ்., கோப்பை கிரிக்கெட் வைப்பு நிதி அணி அதிர்ச்சி தோல்வி
டி.வி.எஸ்., கோப்பை கிரிக்கெட் வைப்பு நிதி அணி அதிர்ச்சி தோல்வி
டி.வி.எஸ்., கோப்பை கிரிக்கெட் வைப்பு நிதி அணி அதிர்ச்சி தோல்வி
ADDED : மே 21, 2025 12:34 AM

சென்னை, திருவள்ளுர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டி.வி.எஸ்., லுாகாஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், ஆவடியில் நடக்கின்றன. இரு குரூப்பிலும், தலா ஐந்து அணிகள், தலா நான்கு லீக் சுற்றுகள் முறையில் மோதி வருகின்றன.
'குரூப் - 1' பிரிவு ஆட்டத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் இந்தியா ஜப்பான் லைட்டிங் அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அணி, 30 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 192 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய இந்தியா - ஜப்பான் லைட்டிங் அணி, 29.5 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 193 ரன்களை அடித்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
'குரூப் - பி' பிரிவில், லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவன அணி, 30 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 180 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் குமார், 44 ரன்களுக்கு ஐந்து விக்கெட் எடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, சென்னை பெட்ரோலியம் சி.எல்., அணி, 29.3 ஓவர்களில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 181 ரன்களை அடித்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.