/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்
/
குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்
குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்
குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்
ADDED : பிப் 18, 2025 03:56 AM

அண்ணா நகர் : அண்ணா நகர் 6வது அவென்யூவைச் சேர்ந்தவர் வீராசாமி, 49; ஹோட்டல் ஊழியர். கடந்த 10ம் தேதி ஹோட்டல் அருகே, இவரது, 'ஹோண்டா ைஷன்' பைக் திருடுபோனது.
இது குறித்த புகாரின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர். இதில், பைக்கை திருடியது, அயனாவரத்தைச் சேர்ந்த ரமேஷ், 45, என்பது தெரிய வந்தது.
அம்பத்துார், கள்ளிக்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை, போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இது குறித்து அண்ணா நகர் தனிப்படை போலீசார் கூறியதாவது:
அண்ணா நகரில் மட்டுமின்றி, ஓட்டேரி, பூந்தமல்லி, குன்றத்துார், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பல இடங்களில், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை, ரமேஷ் திருடி விற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
போரூரில், கடந்த 2020ல் சிக்கிய ரமேஷிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை முடிந்து, மீண்டும் வெளியில் வந்தவர், மீண்டும் திருட்டு வழக்கில் வில்லிவாக்கம் போலீசாரிடம் சிக்கினார். 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இருந்தும் திருந்தாத ரமேஷ், மீண்டும் கைவரிசை காட்ட அண்ணா நகர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்; எட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.