ADDED : மே 15, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதிஷ்குமார், 19. அவர் எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அறையில் ஐந்து பேருடன் தங்கியிருந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த, 10ம் தேதி இரவு, ஐந்து பேரின் மொபைல் போன்களும் திருடுபோயிருந்தன.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார், சென்னை மாத்துார் பகுதியைச் சேர்ந்த ராஜி, 27, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முகமது காசிம், 35 ஆகிய இருவரும் மொபைல் போன் திருடியதை கண்டுபிடித்தனர். இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 19 மொபைல்போன்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.