ADDED : ஏப் 21, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல், தியாகி சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் தமிழா, 35 ; வழக்கறிஞர். இவரை, கஞ்சா போதையில் வந்த இருவர், வீட்டின் அருகே வைத்து, நேற்று முன்தினம் மாலை வெட்டினர்.
இதில், தமிழாவின் இடது கையில் வெட்டு காயம் விழுந்துள்ளது. அவரது மனைவி, தமிழாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, தமிழாவை வெட்டிய அருண், 32, தீபக், 30 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

