தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவர்களை தாக்கிய இருவர் கைது

சிறுவர்களை தாக்கிய இருவர் கைது

சிறுவர்களை தாக்கிய இருவர் கைது


ADDED : மே 02, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திரு.வி.க.நகர், திரு.வி.க., நகரைச் சேர்ந்த 14 மற்றும் 10 வயது சகோதரர்கள், காமராஜ் நகர் மாநகராட்சி கழிப்பறை அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான 'புறா' விஜய் மற்றும் அவனது நண்பர்கள், மதுபோதையில் சிறுவர்களை அழைத்து தகராறு செய்துள்ளனர். பின், அவர்களை கையால் தாக்கி விரட்டியுள்ளனர்.

தாக்கியதில் உதட்டில் காயமடைந்த சிறுவனில் ஒருவர், பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு சிறுவனுக்கு கீழ் உதட்டில் இரண்டு தையல்கள் போடப்பட்டன.

புகாரின்படி, திரு.வி.க., நகரைச் சேர்ந்த 'புறா' விஜய், 21, மற்றும் திருப்பதி, 23, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us