ADDED : ஜன 29, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்:தலைமைச் செயலக காலனி போலீசார், நேற்று முன்தினம் இரவு அயனாவரம், சாமிதாஸ்புரத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சாலையோரத்தில் ரவுடிகள் சிலர் மது அருந்தினர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
ஆத்திரமடைந்தோர், போலீஸ்காரர்கள் மாரிசெல்வம், முரளி ஆகியோரை சரமாரியாக தாக்கிதப்பியோடினர்.
இதில், வினோத்குமார், 30, வீரபத்திரன், 19, ஆகிய இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.