/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துப்புரவு பணியாளர்களை தாக்கிய இருவர் கைது
/
துப்புரவு பணியாளர்களை தாக்கிய இருவர் கைது
ADDED : செப் 06, 2025 11:18 PM

தி.நகர், :துாய்மை பணியாளர் மற்றும் மேற்பாவையாளரை தாக்கிய, துணிக்கடை உரிமையாளர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர், கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 49; மாநகராட்சி துாய்மை பணியாளர். கடந்த 4ம் தேதி, சக பணியாளர்களுடன், தி.நகர் ரங்கநாதன் தெருவில் கிடந்த குப்பையை பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து, அருகில் உள்ள தனியார் துணிக்கடையின் வாசலில் வைத்துள்ளார்.
அங்கு வந்த கடையின் உரிமையாளர் நாகூர்மீரான், குப்பையை எடுக்கும்படி தகாத வார்த்தையால் அவரை பேசியுள்ளார். இதை, துப்பரவு மேற்பணியாளர் லட்சுமணன் தட்டிக் கேட்டுள்ளார்.
இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, நாகூர்மீரான் மற்றும் கடையின் ஊழியர்கள், அர்ஜூனனையும், லட்சுமணனையும் தாக்கி காயப்படுத்தினர்.
துாய்மை பணியாளர்கள் புகாரையடுத்து, நாகூர்மீரான், 32, ஊழியர் தர்மதுரை, 33, ஆகிய இருவரையும் மாம்பலம் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.