/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெல்டிங் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
/
வெல்டிங் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூலை 20, 2025 11:32 PM
கொடுங்கையூர்:வெல்டிங் தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இருவர், கைது செய்யப்பட்டனர்.
கொடுங்கையூர், யூனியன் கார்பைட் சாலையைச் சேர்ந்தவர் யுவராஜ், 38; வெல்டிங் தொழிலாளி. இவர், நேற்று கொடுங்கையூர் - திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், யுவராஜிடம் வீண்தகராறு செய்து, செங்கல், இரும்பு கம்பியால் தாக்கி தப்பினர்.
இதில், முகம், கையில் காயமடைந்த யுவராஜை, அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசாரின் விசாரணையில், கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 28, வெங்கடேஷ், 24, ஆகியோர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.