தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாலிபரை தாக்கி 'ஐ போன்' பறித்த இரண்டு பேர் கைது

வாலிபரை தாக்கி 'ஐ போன்' பறித்த இரண்டு பேர் கைது

வாலிபரை தாக்கி 'ஐ போன்' பறித்த இரண்டு பேர் கைது


UPDATED : மே 17, 2026 10:15 PM

ADDED : மே 17, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 10:15 PM ADDED : மே 17, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்மஞ்சேரி: போதையில் இருந்த தனியார் நிறுவன ஊழியரை தாக்கி, ஐபோன், பணம் பறித்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 14ம் தேதி இரவு, ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் மது அருந்தி கொண்டிருந்தார்.

போதையில் இருந்த இவரை, மூன்று பேர் தாக்கி, அவர் வைத்திருந்த ஐபோன் மற்றும் 50,000 ரூபாயை பறித்து சென்றனர். முகம், உதட்டில் பலத்த காயத்துடன், தனியார் மருத்துவமனையில் தமிழ்செல்வன் சேர்க்கப்பட்டார்.

செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார், 30, ஜெகன், 37, உட்பட மூன்று பேர் என தெரிந்தது. இவர்களை இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us