/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் துாய்மை பணியாளரிடம் அத்துமீற முயன்ற இருவர் கைது
/
பெண் துாய்மை பணியாளரிடம் அத்துமீற முயன்ற இருவர் கைது
பெண் துாய்மை பணியாளரிடம் அத்துமீற முயன்ற இருவர் கைது
பெண் துாய்மை பணியாளரிடம் அத்துமீற முயன்ற இருவர் கைது
ADDED : ஜூன் 05, 2025 12:39 AM
ஆதம்பாக்கம், ஆலந்துார் பகுதியை சேர்ந்த 30வயது பெண், ஆதம்பாக்கம், 165வது வார்டில் சென்னையில் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனமான உர்பேசர் நிறுவனத்தில், துாய்மை பணியாளராக பணியாற்றுகிறார்.
இவர், நேற்று முன்தினம் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆதம்பாக்கம், இந்திரா நகர் சந்திப்பு அருகே சென்றபோது, அவரை வழிமறித்த இருவர், ஆபாசமாக பேசியுள்ளனர்.
மேலும் அத்துமீறி நடந்து கொண்ட அவர்கள், உல்லாசமாக இருக்க வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிந்த அந்த பெண்ணிடம், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய அப்பெண், உர்பேசர் நிறுவன மேற்பார்வையாளர் தினேஷிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஆதம்பாக்கம் ரோந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருவரும் தப்பிச்சென்றது தெரிந்தது.
ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமராக காட்சிகள் வாயிலாக குற்றவாளிகளை தேடினர்.
இதில், நங்கநல்லுார், இந்திரா நகரை சேர்ந்த லோகேஷ், 23, சானட்டோரியம், துர்கா நகரை சேர்ந்த புருஷோத்தமன், 18, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவர்களின் மொபைல் போன் எண்களை வைத்து, ரெட்ஹில்ஸ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.