தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொடர் செயின் பறிப்பு இருவர் கைது

தொடர் செயின் பறிப்பு இருவர் கைது

தொடர் செயின் பறிப்பு இருவர் கைது


ADDED : ஜூன் 17, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணா நகர்: அண்ணா நகர், ஒய் - பிளாக் 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 73. இவர், 14ம் தேதி இரவு கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர், மூதாட்டியின் 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே, மூதாட்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், திருவேற்காடு காவல் நிலைய எல்லையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முகமது ஜாபர், 26, மற்றும் கிஷோர் குமார், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டியிடம் செயின் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் அண்ணா நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இவர்கள் கடந்த 5ம் தேதி பூந்தமல்லி, 6ம் தேதி போரூர், 7ம் தேதி திருவேற்காடு, 14ம் தேதி அண்ணா நகர் என, தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us