ADDED : செப் 21, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே சிறுகத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 18ம் தேதி இரவு, குன்றத்துார் அருகே தண்டலத்தில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார்.
கோவூரைச் சேர்ந்த பிரபு, 32, என்பவரிடம் வாங்கிய 6,000 ரூபாயை திருப்பி தராததால் ஏற்பட்ட தகராறில், மது அருந்த அழைத்து சென்று, தலையில் கல்லை போட்டு, விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து பிரபு, அவரது நண்பர் சாரதி ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
