/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான பணி தளத்தில் பணம் பறித்த இருவர் கைது
/
கட்டுமான பணி தளத்தில் பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஆக 26, 2025 12:20 AM
வளசரவாக்கம், கட்டுமான பணித்தளத்தில் நுழைந்து, வடமாநில தொழிலாளர்களிடம் கத்திமுனையில் மொபைல் போன் மற்றும் பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம், மதுரை மீனாட்சி நகரில் கட்டப்பட்டு வரும் வீட்டில், வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 27ம் தேதி அதிகாலை அங்கு புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேர், துாங்கி கொண்டிருந்த மூன்று பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி 5,000 ரூபாய் மற்றும் மூன்று மொபைல் போன்களை பறித்து சென்றனர்.
இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், சஞ்சய், 22, என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடந்த 4ம் தேதி அவரை கைது செய்த போலீசார், ஒரு மொபைல் போனை மீட்டனர்.
தலைமறைவாக இருந்த, போரூர் காரம்பாக்கத்தைச் சேர்ந்த அபினாஷ், 19, லட்சுமி நகரை சேர்ந்த சஞ்சீவ், 22 ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அபினாஷ் மீது 5 வழக்குகளும், சஞ்சீவ் மீது 9 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

