/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவருக்கு 'லிப்ட்' கொடுத்து பணம் பறித்த இருவர் கைது
/
முதியவருக்கு 'லிப்ட்' கொடுத்து பணம் பறித்த இருவர் கைது
முதியவருக்கு 'லிப்ட்' கொடுத்து பணம் பறித்த இருவர் கைது
முதியவருக்கு 'லிப்ட்' கொடுத்து பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 09:17 PM
ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 61; நகைக்கடை காவலாளி. நேற்று முன்தினம் மதியம் ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள 'டாஸ்மாக்' கடைக்கு சென்றுள்ளார். அவரை, இருவர் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி, பைக்கில் ஏற்றி சென்றனர்.
ராமகிருஷ்ணாபுரம், முதல் தெருவில் திடீரென இறக்கி தாக்கினர். பின், அவரிடம் இருந்த சம்பள பணம் 9,000த்தை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கிளென்குமார், 21, இஸ்ரவேல், 24, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் 2,900 ரூபாய் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.