ADDED : மார் 28, 2026 06:15 PM
அ நிறம் | அளவு
சென்னை: எழும்பூர், சுந்தர் தெருவைச் சேர்ந்தவர் விக்டர், 27; ஆட்டோ ஓட்டுநர். நேற்று அதிகாலை, எழும்பூர் ரங்காச்சாரியார் தெருவில், நண்பர்களான சையது ஷர்புதின், 25, சையது அசாருதீன், 27, ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, விக்டரின் தாய் குறித்து, சையது ஷர்புதின் அவதுாறாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்து தகராறு ஏற்பட்டதில், நண்பர்கள் இருவரும் கீழே கிடந்த பீர்பாட்டிலால் விக்டரின் மண்டையை உடைத்து தப்பிச் சென்றனர்.
இதில் தலையில் ரத்த காயமடைந்த ஓட்டுநர் விக்டர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட,சையது ஷர்புதின், சையது அசாருதீன், ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
