/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது
/
கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது
கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது
கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது
ADDED : நவ 14, 2025 03:06 AM

சென்னை: கைலாயத்திற்கு ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் 38 பேரிடம் 12.70 லட்சம் ரூபாயை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட, இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிக்கேணி, வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள், 54. இவரிடம், அம்பத்துாரைச் சேர்ந்த சுவாதீஸ்வரன், 34 என்பவர், குறைந்த பணத்தில் ஆன்மிக சுற்றுலாவாக கைலாயம் அழைத்துச் செல்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய பெருமாள் 40,000 ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அதுமட்டுமல்லாமல், சுவாதீஸ்வரனின் மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்'பில் இருந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த பெருமாள், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், ஆன்மிக சுற்றுலா பெயரில் பெருமாள் உட்பட 38 பேரிடம் இருந்து, 12.70 லட்சம் ரூபாய் வசூலித்து, சுவாதீஸ்வரன் ஏமாற்றியது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த சுவாதீஸ்வரன் மற்றும் ஆன்மிக வாதிகளிடம் பணம் வசூல் செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி, 58 என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

