ADDED : பிப் 14, 2024 01:02 AM

மாதவரம், மாதவரம் பகுதியில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, மாதவரம், அம்பேத்கர் நகர், மூன்றாவது தெருவில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவர் அருகே, இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்து, பதுக்கி வைத்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாரன், 50 மற்றும் அபினேஷ், 23, என தெரிந்தது.
மாதவரம், கொடுங்கையூர் பகுதியில் உள்ள மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மாதவரம் மெட்ரோ பணியில் ஈடுபடுவோர் மற்றும் மஞ்சம்பாக்கம் யார்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 24 கிலோ எடை கொண்ட 47 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
