/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞருக்கு போதை ஊசி செலுத்திய இருவர் கைது
/
இளைஞருக்கு போதை ஊசி செலுத்திய இருவர் கைது
ADDED : மே 24, 2025 12:16 AM
எம்.கே.பி.நகர்,:வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முகேஷ், 19. இவர் சுமைத்துாக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரையை ஊசி மூலம் உடலில் செலுத்தி கொண்டார். இந்நிலையில், மாலையில் ஊசி செலுத்திய வலது கையில், வீக்கம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முகேஷிற்கு போதை ஊசி செலுத்தியது தொடர்பாக, வியாசர்பாடியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கிேஷார், 18, மற்றும் சஞ்சய், 23, ஆகிய இருவரை, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.