/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமூல் கேட்டு டிபன் கடையை சூறையாடிய இருவர் கைது
/
மாமூல் கேட்டு டிபன் கடையை சூறையாடிய இருவர் கைது
ADDED : டிச 24, 2024 01:15 AM

அண்ணா நகர், ட
அண்ணா நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 35. இவர், அண்ணா நகர், நியூ ஆவடி சாலையோரத்தில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, கடந்த 21ம் தேதி இரவு, ஆட்டோவில் வந்த சிலர், வெண்ணிலாவை பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரமறுத்ததால், அத்திரமடைந்தவர்கள், கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி தப்பினர்.
இதுகுறித்து, அண்ணா நகர் போலீசில் நேற்று முன்தினம் வெண்ணிலா புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அயனாவரத்தை சேர்ந்த கோகுல் குமார், 25 மற்றும் அருணாச்சலம், 20 ஆகிய இருவரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் நேற்று சிறையில் அடைத்த போலீசார், அவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.