/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மே.வங்க தொழிலாளர்களிடம் வழிப்பறி: இருவர் கைது
/
மே.வங்க தொழிலாளர்களிடம் வழிப்பறி: இருவர் கைது
ADDED : பிப் 03, 2026 05:57 AM
ஓட்டேரி: வழிப்பறி திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் சயத் அன்வர், 21, அப்துல் ரகீம், 22, ரப்பாணி, 18, மற்றும் அக்தர் அலி, 27. கட்டட தொழிலாளர்களான இவர்கள், கடலுாரில் பணிபுரிகின்றனர். சொந்த ஊர் செல்வதற்காக, நேற்று அதிகாலை சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
அங்கு, அதிகாலை 4:00 மணியளவில் தேநீர் அருந்திய போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கும்பல், கத்திமுனையில் மிரட்டி மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் 1,000 ரூபாயும், கையில் இருந்த 3,500 ரூபாய் என 4,500 ரூபாயை பறித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், ஓட்டேரியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 22, மற்றும் சஞ்சய், 21, ஆகியோரை பிடித்தனர். தனுஷ், 20, என்பவர் தப்பியோடினார். பிடிபட்ட இருவரையும் ரயில்வே போலீசார், ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தனுஷை போலீசார் தேடி வருகின்றனர்.

