/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி கல்வி சான்று தயாரிப்பு நிறுவனம் நடத்திய இருவர் கைது
/
போலி கல்வி சான்று தயாரிப்பு நிறுவனம் நடத்திய இருவர் கைது
போலி கல்வி சான்று தயாரிப்பு நிறுவனம் நடத்திய இருவர் கைது
போலி கல்வி சான்று தயாரிப்பு நிறுவனம் நடத்திய இருவர் கைது
ADDED : அக் 27, 2024 12:29 AM

சென்னை, ஹைதராபாத் மற்றும் நிஜாமாபாதில், போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயார் செய்து கொடுத்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஹைதராபாதைச் சேர்ந்தவர் அஜய்குமார் பண்டாரி. இவர் வேலைக்காக அமெரிக்கா செல்ல, விசா வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
அதற்கான நேர்முகத் தேர்விற்கு, 22ம் தேதி வந்தவரின் ஆவணங்களை, துாதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், அஜய்குமார் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் போலியானவை என்பதை கண்டறிந்த அதிகாரிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர். அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த பாலந்தேஸ்வர ராவ், 47, மற்றும் நிஜாமாபாதைச் சேர்ந்த கப்சே மகேஷ், 49, ஆகிய இருவரும், போலி சான்றிதழ் தயாரிப்பதற்கென, நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆய்வாளர் ஷீஜாராணி தலைமையிலான தனிப்படை போலீசார், ஹைதராபாத் மற்றும் நிஜாமாபாதிற்கு விரைந்தனர்.
இருவரையும் பிடித்து விசாரித்ததில், போலி சான்றிதழ் வேண்டி அணுகும் நபர்களுக்கு, 5 - 6 லட்சம் வரை வாங்கிக் கொண்டு, சான்றிதழ் தயாரித்து கொடுத்து வந்தது தெரியவந்தது.
இருவரையும், நேற்று கைது செய்த போலீசார், போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய கணினி, மடிக்கணினி, பிரின்டர், போலியான முத்திரைகள், மொபைல் போன், 90க்கும் மேற்பட்ட போலி கல்வி சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.