/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிநாட்டு சிகரெட் விற்ற இருவர் கைது
/
வெளிநாட்டு சிகரெட் விற்ற இருவர் கைது
ADDED : பிப் 17, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராட்வே: தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்கள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிராட்வே பகுதியில் தடை செய்யப்பட்ட, வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராஜாஜி சாலையில் உள்ள பர்மா பஜாரில், சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 32, பிரகாஷ், 30, என தெரிந்தது.
அவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 10,800 ரூபாய் மதிப்பிலான 360 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

