ADDED : ஜூன் 21, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி,ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, சந்திரயோகி சமாதி தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து, ஓட்டேரி போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடத்தில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. விசாரித்ததில், பிடிபட்டவர்கள் பீஹாரில் இருந்து பாகமதி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பீஹாரைச் சேர்ந்த குட்டுகுமார் யாதவ், 18, மற்றும் தேவிலால் யாதவ், 33, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

