ADDED : ஆக 27, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஓட்டேரி சுப்புராயன் பிரதான தெரு பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி வந்த இருவரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிப்பட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள், ஓட்டேரி பாஷியம் 2வது தெரு பகுதியை சேர்ந்த பிரதீஸ், 25 மற்றும் பிரேம், 24 என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.