/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது
/
போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது
ADDED : ஏப் 17, 2025 12:29 AM
சென்னை, ஜாம்பஜார் போலீசார் நேற்று காலை, தேவராஜ் தெரு - ஜானி ஜான் கான் சாலை சந்திப்பில், சந்தேகத்திற்கு இடமாக நின்ற, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 22 என்பவரை பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சோதனை செய்தனர். அவரிடம், 64 போதை மாத்திரைகள், இரண்டு சிரஞ்சிகள் இருந்தன. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.
மதுரவாயல்
மதுரவாயல் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்த, நெற்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 76 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஏழு சிரஞ்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர், வெளி மாநிலங்களில் இருந்து, குறைந்த விலைக்கு வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, போதை மாத்திரைகளாக விற்றது தெரியவந்தது.