ADDED : ஜூன் 28, 2025 04:10 AM

கொடுங்கையூர்,:வியாசர்பாடியில், போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, முல்லை நகர் காம்ப்ளக்ஸ் 21வது பிளாக் அருகே போதைக்காக, விதிமீறி வலி நிவாரண மாத்திரைகள் விற்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்தில், ஜீவா, 25, என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கிருந்து 254 மாத்திரைகளை கைப்பற்றினர்.
அவர் அளித்த தகவலின்படி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த பாலாஜி பாபு, 26, என்பவரிடம் விசாரித்தனர்.
இதில், பாலாஜி பாபு ஒரு வாரத்திற்கு முன் 'இந்தியா மார்ட்' செயலி மூலமாக, தலா ஒரு மாத்திரையை, 20 ரூபாய் என, 600 நைட்ரவிட் வலி நிவாரணி மாத்திரைகளை 12,000 ரூபாய்க்கு, பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து கூரியர் மூலம் வாங்கி, அதை ஜீவாவிடம் கொடுத்து, ஒரு மாத்திரையை 300 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.