/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
/
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
ADDED : பிப் 16, 2026 06:45 AM
தண்டையார்பேட்டை: பிப். 16-: தண்டையார்பேட்டையில், போதை மாத்திரைகள் விற்ற சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தண்டையார்பேட்டை, ஜெ.பி.கோவில் தெரு பகுதியில், தண்டையார்பேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவர்களது பையை சோதனையிட்டனர்.
அதில், உடல்வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்ததும், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ், 23, மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் இருந்த 45 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, ஆகாஷை சிறையில் அடைத்து, சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

