/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதவி கேட்பது போல நடித்து போன் பறித்த இருவர் கைது
/
உதவி கேட்பது போல நடித்து போன் பறித்த இருவர் கைது
ADDED : ஜூன் 30, 2025 03:58 AM

கோயம்பேடு:கோயம்பேடில், உதவி கேட்பது போல நடித்து, மொபைல் போன் பறித்து தப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் பாஷா, 53. பணி நிமித்தமாக சென்னை வந்த இவர், ஊர் திரும்ப, கோயம்பேடு பேருந்து நிலையம், ஆறாவது நடைமேடையில் பேருந்திற்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த வாலிபர்கள் மூவர், பேசி விட்டு தருவதாக உதவி கேட்பது போல நடித்து அவரிடம் மொபைல் போனை வாங்கினர். போன் வாங்கியதும், கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் தப்பினர். இது குறித்து கமல்பாஷா, ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார்.
மூவரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பிச் செல்ல இருவர் பிடிபட்டனர். விசாரணையில், கும்பகோணத்தைச் சேர்ந்த நிகில், 23, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ், 26, என, தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து கமல்பாஷாவின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியவரை தேடுகின்றனர்.