ADDED : ஏப் 16, 2026 11:37 PM
அ நிறம் | அளவு
கிண்டி:டீக்கடையில் வாலிபர்களை சோடா பாட்டிலால் தாக்கிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை, ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் மோகன், 30. நேற்று முன்தினம், நண்பர் விஜய்யுடன், கிண்டி அரசு மருத்துவமனை அருகில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேர், இருவரையும் மிரட்டி மொபைல் போன் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், கடையில் இருந்த சோடா பாட்டில்களை எடுத்து, கார்த்திக், விஜய் ஆகியோரை தாக்கினர்.
கிண்டி போலீசார் விசாரித்து, கே.கே., நகரை சேர்ந்த கார்த்திக், 29, தீனா, 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடுகின்றனர்.
