ADDED : டிச 24, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, சைதாப்பேட்டை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ், 24, தாம்பரத்தை சேர்ந்தவர் மோகன், 24. இருவரும், திருட்டு வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த, 18ம் தேதி இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
மறுநாள், சோழிங்கநல்லூரில் டீக்கடை முன் நிறுத்தியிருந்த, பாஸ்கர், 50, என்பவரின் இருசக்கர வாகனத்தை இருவரும் திருடினர். செம்மஞ்சேரி போலீசார், நேற்று, பிரகாஷ்ராஜ், மோகன் ஆகிய இருவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.