ADDED : மார் 06, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் - பல்லாவரம் சாலையில், அனகாபுத்துார் காவல் சோதனை சாவடியில் நேற்று, அதிகாலை 2:00 மணிக்கு, ஒரு பசு மாட்டுடன் சென்ற டாடா ஏஸ் மினி வேனை நிறுத்தி, சங்கர் நகர் போலீசார் விசாரித்தனர்.
அம்பத்துாரைச் சேர்ந்த மதன், 2 0, நீலகண்டன்,21, ஆகியோர், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் சாலையில் திரிந்த பசு மாட்டை திருடி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பசு மாடு, மினி வேனுடன் இருவரையும் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். திருமு டிவாக்கம் போலீ சார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
