ADDED : ஏப் 22, 2026 03:55 AM
அண்ணா சாலை:நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் மதன்பாபு, 52. இவர் பணிபுரியும் நிறுவனத்தின் கிளை அலுவலகம், ராயப்பேட்டை ஜி.பி., சாலையில் உள்ள வணிக வளாகத்தில் துவங்கப்பட்டது. சில நாட்களிலேயே, மாநகராட்சி அதிகாரிகள், வணிக வளாகத்திற்கு 'சீல்' வைத்தனர்.
இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட வணிக வளாகத்தில், தனியார் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த 'ஏசி'யின் வெளிப்புறத்தில் இருந்த பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மதன்பாபு, நேற்று முன்தினம் அண்ணா சாலை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில், அண்ணா சாலையைச் சேர்ந்த மாணிக்கம், 31, ராஜா, 39, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
