ADDED : ஏப் 10, 2026 09:48 PM
அ நிறம் | அளவு
எழும்பூர்: எழும்பூரில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து மின்வடங்களை திருடிச் சென்ற இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 65. இவர், உமாசங்கர் என்பவருக்கு சொந்தமான பழைய வீடுகளில், காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம், பணியிலிருந்தபோது பூட்டியிருந்த வீட்டிற்குள் சத்தம் கேட்டுள்ளது. ஜன்னல் வழியாக பார்த்தபோது பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த இருவர், மின்வடங்களை திருடிக் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 20, திவான், 19, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, 15 கிலோ மின்வடங்களை பறிமுதல் செய்தனர்.
