/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுவது போல் நோட்டமிட்டு பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது
/
ஆட்டோ ஓட்டுவது போல் நோட்டமிட்டு பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது
ஆட்டோ ஓட்டுவது போல் நோட்டமிட்டு பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது
ஆட்டோ ஓட்டுவது போல் நோட்டமிட்டு பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 23, 2025 12:33 AM
மதுரவாயல், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 50. இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் நாகலட்சுமி, 32. கடந்த பிப்., 22ம் தேதி, இருவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த இரண்டு சவரன் நகைகளை திருடி சென்றனர்.
இதுகுறித்து, மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவ இடத்தில் உள்ள கைரேகையை வைத்து, திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்தனர்.
அதில், அந்த கைரேகை ஏற்கனவே திருட்டு வழக்கில் ஈடுபட்ட அயனாவரம், பரசுராமன் ஈஸ்வரன் தெருவை சேர்ந்த கார்த்திக், 29, என்பவர் கைரேகையுடன் ஒத்துப்போனது.
இதையடுத்து, கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி, அவரது கூட்டாளி அயனாவரம் பி.வி., தெருவை சேர்ந்த சுதாகர், 30, என்பவரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டுவது போல், அந்த பகுதி முழுதும் சுற்றி, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து, ஒரு சவரன் நகை மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.