/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு கம்பி திருடிய இருவர் கைது
/
இரும்பு கம்பி திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 10, 2025 12:42 AM

கே.கே., நகர், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 60. இவர், கே.கே., நகர் 10 வது செக்டார் 65 வது தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் மேஸ்திரியாக பணி செய்து வருகிறார்.
கடந்த 6 ம் தேதி, நந்தகுமார் வேலை செய்துக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மூவர் நபர்கள், ஒரு கட்டு இரும்பு கம்பியை திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி கே.கே., நகர் போலீசார் விசாரித்தனர். திருட்டில் ஈடுபட்ட பெரும்பாக்கம், 52 வது பிளாக்கை சேர்ந்த தனுஷ்குமார், 19 மற்றும் 17 வயது சிறுவன் என, இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சிறுவன் மீது நான்கு திருட்டு வழக்குகள் உள்ளன. சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

