/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் போன் திருடிய இருவர் கைது
/
முதியவரிடம் போன் திருடிய இருவர் கைது
ADDED : டிச 09, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:வியாசர்பாடி, பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 77; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பால் வாங்க, வியாசர்பாடி, முத்து தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், ராமகிருஷ்ணனின் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை பறித்து தப்பினர். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு, ஆடுதொட்டி பிளாட்பாரத்தில் வசிக்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நசீர், 22, தண்டையார்பேட்டை, படேல் நகரைச் சேர்ந்த அஸ்லாம், 22, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.