/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் கேட்பது போல் நடித்து போன் திருடிய இருவர் கைது
/
தண்ணீர் கேட்பது போல் நடித்து போன் திருடிய இருவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து போன் திருடிய இருவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து போன் திருடிய இருவர் கைது
ADDED : மே 25, 2025 08:15 PM
யானைகவுனி:அயனாவரத்தை சேர்ந்தவர் அஜய்சுமித், 22. இவர். யானைகவுனி, ஆதியப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு பேக்கரியில். மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று காலை பேக்கரியில் இருந்த போது, அருகில் பிளாட்பாரத்தில் வசிக்கும் கார்த்திக், 21, என்பவர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
அவருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு பார்த்தபோது, கடையில் இருந்த அவரது மொபைல்போன் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து யானைகவுனி போலீசில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், கார்த்திக் தண்ணீர் கேட்பதுபோல நடித்து, அவரது மொபைல் போனை திருடிச் சென்று, அவரது கூட்டாளி விக்னேஷிடம் கொடுத்தது தெரியவந்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சவுக்கார்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், 22, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கொளத்துார், வஞ்சிரவேல் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 63; வெல்டிங் தொழிலாளி.
இவர் நேற்று பைக்கில் சென்ற போது, அவ்வழியே வந்த இருவர் மீது இடித்ததில், இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது, வெங்கட்ராமனிடம் பேசி விட்டு தருவதாக கூறி, மொபைல் போனை வாங்கிய அவர்கள், மொபைல் போனுடம் தப்பினர். இதுகுறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.