/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிக்கெட் புக் செய்வதாக கூறி ரூ.48,000 திருடிய இருவர் கைது
/
டிக்கெட் புக் செய்வதாக கூறி ரூ.48,000 திருடிய இருவர் கைது
டிக்கெட் புக் செய்வதாக கூறி ரூ.48,000 திருடிய இருவர் கைது
டிக்கெட் புக் செய்வதாக கூறி ரூ.48,000 திருடிய இருவர் கைது
ADDED : அக் 24, 2025 02:04 AM

சென்னை: ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி, பயணியரை மிரட்டி, 48,000 ரூபாய் மற்றும் மொபைல் போன்களை பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பீர்பால், 23, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தன் நண்பருடன் சொந்த ஊருக்கு செல்ல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த 13ம் தேதி வந்தார். அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
அங்கிருந்த இருவர், டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, சேத்துப்பட்டு பகுதிக்கு அவர்களை அழைத்து சென்றனர். அங்கு, பீர்பால் உள்ளிட்ட இருவரையும் தாக்கி, பணம், இரண்டு மொபைல் போனை பறித்தனர். 'ஜிபே' செயலி மூலம் 48,000 ரூபாயை, தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பினர்.
சேத்துபட்டு போலீசார் விசாரித்து, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் பதுங்கியருந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ராம், 24, தினேஷ்குமார் முகியா, 21, ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும், சென்டரலில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு, ஆந்திராவிற்கு சென்று, அங்குள்ள ரயில் நிலையத்தில் துாங்கி கொண்டிருந்த 16 பேரிடம் மொபைல் போன்களை திருடியது தெரிந்தது. இருவரிடமிருந்து, 18 மொபைல் போன்களை திருடி, இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.

