/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இருவர் கைது
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இருவர் கைது
ADDED : டிச 17, 2024 12:17 AM
சென்னை, சென்னை, எண்ணுார் காசி கோவில் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன், 26; ரவுடி. இவர், சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி அப்பு கொடுத்ததாக கூறி, 7.6 எம்.எம்., ரக துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களை, தன் வழக்கறிஞர் பழனிமுத்து என்பவரிடம் ஒப்படைத்திருந்தார்.
அவற்றை, காசிமேடு காவல் நிலையத்தில் பழனிமுத்து ஒப்படைத்தார். போலீசார், இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து, சிறையில் உள்ள அப்புவிடம் விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, அப்புவின் கூட்டாளிகளான அரும்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன், 30, மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 28, ஆகியோரை, காசிமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, நாட்டு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

