/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
300 கிலோ குட்கா பறிமுதல் பள்ளிக்கரணையில் இருவர் கைது
/
300 கிலோ குட்கா பறிமுதல் பள்ளிக்கரணையில் இருவர் கைது
300 கிலோ குட்கா பறிமுதல் பள்ளிக்கரணையில் இருவர் கைது
300 கிலோ குட்கா பறிமுதல் பள்ளிக்கரணையில் இருவர் கைது
ADDED : அக் 08, 2025 02:33 AM

பள்ளிக்கரணை பள்ளிக்கரணை போலீசார் நேற்று காலை மயிலை பாலாஜி நகர் பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், சிறு, சிறு மூட்டைகளாக 300 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த இருவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஆவடி, காந்தி தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 36, கே.கே., நகரை சேர்ந்த ஜெகதீசன், 40, என்பது தெரிந்தது.
ஆந்திராவிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வரும் இவர்கள், மயிலை பாலாஜி நகரில் வாடகை வீடு எடுத்து பதுக்கி வைத்து, பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடை களுக்கு விற்றுவந்தது தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.