ADDED : ஏப் 19, 2025 12:12 AM
சென்னை,
மயிலாப்பூர், நாச்சியப்பன் தெருவில் வசித்து வருபவர் பிராங்கிளின், 33. கடந்த, 11ம் தேதி இரவு, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கிவிட்டு திரும்பியபோது, அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல் போன் திருடப்பட்டது தெரியவந்தது.
தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, மொபைல் போன் திருடிய, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வினித்குமார், 26, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த், 36 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, ஒரு மொபைல்போன், 1,000 ரூபாய் ரொக்கம், ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆட்டோவில் சென்று, கூட்டமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க வருவோரிடம், மொபைல் போன் திருடி வந்தது தெரியவந்தது. வினோத்குமார் மீது திருட்டு, வழிப்பறி உட்பட, 12 வழக்குககள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.