/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை இரு சம்பவத்தில் இருவர் கைது
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை இரு சம்பவத்தில் இருவர் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை இரு சம்பவத்தில் இருவர் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை இரு சம்பவத்தில் இருவர் கைது
ADDED : செப் 22, 2024 06:49 AM
புழல், : புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகரை சேர்ந்த 27 வயது பெண் கணவருடன் வசிக்கிறார். கடந்த 18ம் தேதி மதியம் வீட்டிலிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும், காளியப்பன், 36 மற்றும் வெற்றிவேல் என்கிற முருகவேல், 32 ஆகிய இருவர், பெண்ணிடம் அத்துமீறி நடந்ததோடு, பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் கணவரிடம் கூற, அவர், வெற்றிவேல் மற்றும் காளியப்பனிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இருவரின் உறவினர்களும் காளியப்பனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அடுத்த நாளும் வெற்றிவேலும், காளியப்பனும் சேர்ந்து மீண்டும் அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து, மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, கொடுங்கையூரை சேர்ந்த 30 வயது பெண், மண்ணடியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
அங்கு கொடுங்கையூரை சேர்ந்த கார்த்திகேயன், 24 என்பவருடன் பழகியுள்ளார். திடீரென பேசுவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த கார்த்திக், தன் அண்ணன் நேதாஜி என்பவருடன், பார்வதி நகர் பேருந்து நிலையம் அருகில் நின்றிருந்த பெண்ணுடன் தகராறு செய்துள்ளார்.
புகாரின் படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர்.