/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் ரூ. 44 லட்சம் மோசடி வங்கி அதிகாரி உட்பட இருவர் கைது
/
முதியவரிடம் ரூ. 44 லட்சம் மோசடி வங்கி அதிகாரி உட்பட இருவர் கைது
முதியவரிடம் ரூ. 44 லட்சம் மோசடி வங்கி அதிகாரி உட்பட இருவர் கைது
முதியவரிடம் ரூ. 44 லட்சம் மோசடி வங்கி அதிகாரி உட்பட இருவர் கைது
ADDED : அக் 25, 2025 11:41 PM

சென்னை: விருகம்பாக்கத்தில், முதியவரிடம் 'டிஜிட்டல் கைது' எனக்கூறி, 44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், தனியார் வங்கி துணை மேலாளர் உட்பட இருவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பட்டாபி, 83. கடந்த மாதம் 1ம் தேதி 'வாட்ஸாப்' மூலம் இவரிடம் பேசியநபர், தன்னை மும்பை போலீஸ் எனக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி முதியவரை மிரட்டி 44 லட்சம் ரூபாய் பறித்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த லட்சுமணன், 38, மேடி சிவகுமார், 41, ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில், மோசடி பணத்தை பெறுவதற்கு ஏதுவாக, பல்வேறு வங்கிக் கணக்குகளை உருவாக்கிக் கொடுத்த அண்ணாசாலை, தனியார் வங்கி மேலாளர் ராமசந்திரமூர்த்தி, 30, முகமது முஸ்பிக், 20, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.