ADDED : மார் 30, 2026 11:20 PM

புழல்;டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் காயம் அடைந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
புழல் அடுத்த கதிர்வேடு ரெட்டேரி - செங்குன்றம் செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த யுவனேஸ், 41, என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, கொளத்துார் வனசக்தி நகரை சேர்ந்த ராஜேஷ், 39, என்பவரும், அவருடைய நண்பரான கொடுங்கையூரை சேர்ந்த அஜய், 33, என்பவருடன் மது அருந்தியுள்ளார்.
இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பானது. ஆத்திரமுற்ற இருவரும், யுவனேஸை தாக்கியதில், அவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
