/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே வார்டில் இரண்டு பூமி பூஜை அ.தி.மு.க., - தி.மு.க., ' கலகல '
/
ஒரே வார்டில் இரண்டு பூமி பூஜை அ.தி.மு.க., - தி.மு.க., ' கலகல '
ஒரே வார்டில் இரண்டு பூமி பூஜை அ.தி.மு.க., - தி.மு.க., ' கலகல '
ஒரே வார்டில் இரண்டு பூமி பூஜை அ.தி.மு.க., - தி.மு.க., ' கலகல '
ADDED : அக் 05, 2024 12:18 AM

திருவொற்றியூர் தெருவிளக்கு புனரமைப்பு பணிக்காக, திருவொற்றியூரில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், ஒரே நேரத்தில் பூமி பூஜை நடத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் மண்டலம், ஏழாவது வார்டில், 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 142 தெருவிளக்குகள் புனரமைப்பு பணி, இரண்டு தொகுப்புகளாக மேற்கொள்ளப்படுகிறது.
இதில் ஒரு தொகுப்பான கே.சி.பி., சாலை, ஒற்றவாடை ஆகிய பகுதிகளில், 24.82 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும், 68 தெருவிளக்கு புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை, நேற்று காலை 10:00 மணியளவில் கே.சி.பி., சாலையில் நடந்தது.
இதில், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர். அதே வார்டில், மற்றொரு தொகுப்பாக கார்கில் நகரில், சிப்பாய் வடிவேல் தெரு உள்ளிட்ட ஏழு தெருக்களில், 74 தெருவிளக்குகள் புனரமைப்பு பணி, 27.01 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கான பூமி பூஜை, கார்கில் நகரில் நேற்று காலை நடந்தது.
இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.
ஒரே ஒப்பந்ததாரர் மேற்கொள்ளும் தெருவிளக்கு புனரமைப்பு பணிகளுக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருபுறமும், தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் மண்டல குழு தலைவர் மறுபுறமும் பூமி பூஜை நடத்திய சம்பவம், திருவொற்றியூரில் சலசலப்பை ஏற்படுத்தியது.