தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரு பைக்குகள் மோதல்: பிளஸ் 2 மாணவர் பலி

 இரு பைக்குகள் மோதல்: பிளஸ் 2 மாணவர் பலி

 இரு பைக்குகள் மோதல்: பிளஸ் 2 மாணவர் பலி


ADDED : பிப் 09, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவரம்: இரு பைக்குகள் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்; இருவர் காயம் அடைந்தனர்.

செங்குன்றம், கரிகாலன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் ரித்திஷ், 17; பிளஸ் 2 மாணவர். இவரது உறவினர் ஹரிஷ், 18; இருவரும், பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று, 'டிரையம்ப்' பைக்கில் சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

ஜனப்பன்சத்திரம், எம்.ஜி.நகர் அருகே வந்தபோது, முன்னால் சென்ற 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் மோதியது.

இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ரித்திஷ், அங்கிருந்த சாலை மைய தடுப்பு சுவரில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹரிஷ் மற்றும் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கை ஓட்டிய, பொன்னேரியைச் சேர்ந்த பரசுராமன், 35, ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செங்குன்றம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ரித்திஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us