ADDED : செப் 07, 2026 09:04 PM
அம்பத்துார், செப். 8--–
கோவில் திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட சாரம் சரிந்து, இரண்டு பைக்குகள் சேதமடைந்தன.
அம்பத்துார் ஒரகடம் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட திருப்பதி கோவில் திருவிழா சில நாட்களுக்கு முன், கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதற்காக ஒரகடம் சந்திப்பு அருகே காந்தி பிரதான சாலையில், 25 அடி உயரத்திற்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட சாரம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், சாரம் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் சேதமடைந்தன. ஒரு மணி நேரத்திற்கு பின், சரிந்த சாரம் அகற்றப்பட்டது.
இதனால், அம்பத்துார்– செங்குன்றம் சாலையில் இரண்டு கி.மீ., துாரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பத்துார் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
