/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள் இருவர் கைது
/
பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள் இருவர் கைது
ADDED : பிப் 23, 2024 11:58 PM
நொளம்பூர், சென்னை, முகப்பேர், வேணுகோபால் தெருவில், சவுண்டு சர்வீஸ் கடை ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை, இந்த கடைக்கு எதிரில், 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர், போதையில் தகராறில் ஈடுபட்டனர்.
சவுண்டு சர்வீஸ் கடையில் இருந்த சிறுவன் இதை தட்டிக் கேட்டதால், இருவரும் சேர்ந்து சிறுவனை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுவன், நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், தப்பிச் சென்ற இரு சிறுவர்களும் திரும்பி வந்து, சவுண்டு சர்வீஸ் கடை முன் பெட்ரோல் குண்டு வீசினர்.
தகவலறிந்து வந்த போலீசார், சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், 'போலீசில் புகார் அளித்ததால், கடையின் முன் பெட்ரோல் குண்டு வீசியதாக, அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.